டெங்கு நோயினால் 269 பேர் உயிரிழப்பு!

Saturday, July 15th, 2017

இந்த ஆண்டின் கடந்த காலங்களுக்குள் 89,885 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா கூறினார்.
அத்துடன் டெங்கு நோய் காரணமாக 269 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் நிலவிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் நிலை அதிகரித்திருப்பதாக வைத்தியர் ஹசித திசேரா கூறினார்.
அதேவேளை டெங்கு நோய் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில், பல்​வேறு தரப்பினர் வெவ்வேறான தகவல்களை பரப்புவதாகவும், அரசியல்வாதிகள் கூறுகின்ற எண்ணிக்கை, தரவுகள் பிழையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் டெங்கு ஒழிப்பிற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாகவும், இதற்காக அரச தரப்பு மற்றும் அனைத்து தரப்பினர்களும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 05 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: