டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கம் – தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை என தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Sunday, June 19th, 2022

தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் தற்போது முடியுமான அளவு தொடருந்து சேவைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தொடருந்து சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தொடருந்து சேவைகளை அதிகரிப்பதற்கு திட்டமிடப்படுவதோடு கால அளவை குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: