டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் 68 இலட்சம் வருமானம்!

Monday, October 3rd, 2016

 

 

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக மீன்பிடி துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை 68 இலட்சத்தை இலாபமாக பெற்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலாபத்தினை கடந்த 9 மாதங்களில் பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு மேலும் கூறியுள்ளது. இலங்கையில் 21 மீன்பிடி துறைமுகங்கள் காணப்படுவதோடு, இவை அனைத்திற்கும் இந்த வருடத்திற்குள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

விசேடமாக மீன்பிடி துறைமுகங்களில் இடம்பெறும் முறைகேடுகள், ஊழலினை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மீன்பிடி படகுகளுக்கு தேவையான எரிப்பொருள், மின் சக்தி, நீர் வசதி உள்ளிட்ட காரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகளை பதிவு செய்தல் என்பற்றில் ஒழுங்கு முறையை பேணுவதற்கும் இந்த தொழில்நுட்பம் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீன்பிடி படகுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாது விடின் அது தொடர்பில் படகுகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்பதுடன், அவ்வாறும் பதிவு செய்ய தவறும் பட்சத்தில் குறித்த படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்படாது எனவும் மீன்பிடி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Untitled-1

Related posts: