டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாகவே இருக்கின்றோம்  – வேலணை – சாட்டிப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிப்பு!

Monday, November 20th, 2017

வேலணை – சாட்டிப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது நிரந்தர வாழிடங்களுக்காக குடியிருப்பு நிலங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த பகுதி முஸ்லிம் மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் (20) அப்பகுதிக்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்களான யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் – தாம் குறித்த பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் நிலையில் குறிப்பிட்ட 18 குடும்பங்களுக்கான காணி கொள்வனவில் தமக்கு பெரும் கஷ்டநிலை காணப்படுவதால் அக்காணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமக்கு உதவிகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.ஷ

மேலும் தமது பெற்றோருக்கு 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளம் பகுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குடியிருப்புகளை நிறுவி வீடுகள் அமைத்து கொடுத்தது மட்டுமல்லாது அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார் என்றும் இதற்காக அவருக்கு தாம் என்றும் நன்றிக் கடனுள்ளவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மக்களது பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ்’ தேவானந்தா அவர்களது பார்வைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அதற்குரிய தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இதன்போது கட்சியின்  கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts: