ஜேர்மனியில் இருந்து உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்கள்!

டெங்கு நோய் தீவிரமாக பரவுவதைத் கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
இதற்கான விரிவான வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முப்படையினரின் ஒத்துழைப்பும் இதற்குப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைகளை வழங்கக்கூடிய பிரிவு வலுவுடன் செயற்பட்ட போதிலும் டெங்கு நோய் பரவுவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இவ்வருடத்த்தில் இதுவரையில் நாடு முழுவதிலும் 64 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 200 ஆகும். புகைவிசிறல் மற்றும் கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்கான வேலைத்திட்டம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புகை விசிறும் பணிக்காக 1500 பேர் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றம் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|