ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரிப்பு!

Thursday, March 25th, 2021

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் மீது நாடாளுமன்றில் விவாத நடத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.

முன்பதாக குறித்த விடயம் தொடர்பில் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார்.

இதன்போது குறிப்பாக தீர்மானம் முழுமையாக பக்கச்சார்பானதென்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிமுறை மற்றும் யுத்தம் என்பவற்றை விமர்சிப்பதாக இந்த தீர்மானம் உள்ளமையால் இதனை நிராகரிக்கின்றோம் என்றுமு; குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவில் போரில் காணாமல் போனோர் குறித்தும் அவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருக்கின்றார்களா என்பது பற்றி பிரித்தானியா தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதுடன் போரில் உயிரிழந்தவர்கள் பற்றி முறையிட முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: