ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆலோசனை!
Tuesday, May 31st, 2022எரிபொருள் கொள்வனவிற்காக டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் நேற்றையதினம் எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் விஜேசேகரவிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
அதற்கிணங்க ஜூன் மாதத்திற்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலரை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்திற்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 554 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் தேவைப்படும் என இதன்போது அமைச்சர் காஞ்சன விஜேசேகர மத்திய வங்கி ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த தொகையில் 100 மில்லியன் டொலர்கள் இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|