ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!

Monday, June 10th, 2024

ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

அந்தவகையில் இத்தாலியின் ஃபசானோ நகரில் எதிர்வரும் 13ம் திகதி முதல் 15ம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: