ஜஹ்ரானை வழிநடத்திய ஒருவர் இருக்கின்றார் – சிஐடியின் முன்னாள் அதிகாரி தெரிவிப்பு!
Sunday, November 22nd, 2020உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் கொல்லப்பட்டும் கைசெய்யபட்ட போதிலும் இந்த தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என சிஐடியின் முன்னாள் அதிகாரி ரவிசெனிவரட்ண தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரான் ஹாசிமை வழிநடத்திய சக்தியொன்று உள்ளது என தெரிவித்துள்ள அவர் குறிப்பிட்ட நபரை கைதுசெய்வதற்கான கடுமையான முயற்சிகள் தான் ஒய்வுபெறும் வரை இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது ஜஹ்ரான் ஹாசிமின் திட்டமல்ல கண்ணிற்கு தெரியாத சக்தியொன்றின் தீர்மானம் அது என அவர் தெரிவித்துள்ளார்.
வவுனதீவு மாவனல்ல வானத்துவில்வு சம்பவங்கள் குறித்தும் தாழம்குடா சைக்கிள் குண்டுவெடிப்பு குறித்தும் சிஐடியினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் இந்த தாக்குதலிற்கு ஹாசிம் என்பவரும் அவரது சகாக்களும் காரணம் என்பது தெரியவந்தது,சிஐடி அந்த ஹாசிம் குறித்து தீவிரகவனம் செலுத்தியது என முன்னாள் சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் ஜஹ்ரானை வழிநடத்திய ஒருவர் அவருக்கு மேலாக செயற்பட்ட ஒருவர் உள்ளார் என்பதனை வெளிப்படுத்தின என தெரிவித்துள்ள சிஐடி அதிகாரி நான் ஓய்வு பெறும்வரை அந்த நபரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|