ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Tuesday, May 18th, 2021

கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக 1,000 “ஜம்போ ஒக்சிஜன்” சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவற்றை விரைவில் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1000 ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இதற்காக 300 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2000 ஒக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் சில மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: