ஜனாதிபதி மைத்திரிகபல சிறிசேன யாழ் விஜயம்: பல நிகழ்வுகளில் பங்கேற்பு!

Saturday, March 4th, 2017

யாழ்ப்பாணம் இன்றையதினம் வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

யாழ். கச்சேரியில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.

இதில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் குறித்த யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது சிறப்பபான வரவேற்பளிக்கப்பட்டதுடன் பல கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: