ஜனாதிபதி தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் 60 கண்காணிப்பாளர்கள் களத்தில்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 60 கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தவுள்ளது.
குறித்த கண்காணிப்பாளர்கள் குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் பணியில் ஈடுபடவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு அணி இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும், 30 நீண்டகால கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தவுள்ளது.
தேர்தலுக்கு முந்திய நாட்களில் இலங்கை வரும், மேலும் 30 பேர் கொண்ட குறுகிய கால கண்காணிப்பாளர்கள், நாடெங்கும், வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பணிகளைப் பார்வையிடுவார்கள்.
இலங்கையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களுக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் போர்த்துக்கல் நாட்டுப் பிரதிநிதியான மரிசா மாட்டிஸ், தலைமை தாங்குவார்.
டிமித்ரா இயானோ துணைத் தலைமை கண்காணிப்பாளராக செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|