ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவு – பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில்!

Tuesday, June 7th, 2022

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், 40 ஆவது அதிகார சபையான பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Bloomberg இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தமக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: