ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Friday, September 8th, 2017

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் 3 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 3 ஆம் திகதியுடன் முடிவடைந்ததுடன் மேலும் 6 மாதங்களுக்கு பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

விசாரணை தொடர்பான ஆவணங்களின் முக்கிய விடயங்களை முன்வைத்த பின்னரே ஆணைக்குழுவின் பதவிக்காலம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல்,மேசாடிகள் குறித்து விசாரணை நடத்த இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

Related posts: