ஜனாதிபதியின் விஷேட உத்தரவு – யாழ் சிறையில் 110 பேருக்கு விடுதலை!

Sunday, March 29th, 2020

யாழ்.மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுள் சிலரை ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய 110 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள நெருக்கடியைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த கைதிகளுக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு பூர்த்தி செய்ய முடியாது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் என 110 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறே யாழ்ப்பாணம் சிறைச்சாலை இருந்து விடுதலை செய்யப்பட்ட 110 கைதிகளும் தனி நபர் அதாவது சுயபிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது தங்களுக்குத் தாங்களே பிணையில் கையொப்பமிட்டு நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் அவர்களின் வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள மேலும் பல கைதிகளையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: