ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

Friday, September 29th, 2017

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் சகல அமைச்சர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து பிரதேச அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அரச அதிகாரிகளும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதார சபை இரண்டாவது முறையாக ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். கைத்தொழில், வணிகத்துறை அமைச்சு மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சுக்களின் அதிகாரிகள் தேசிய பொருளாதார சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இந்த அமைச்சுக்களின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Related posts: