ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

Wednesday, November 9th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பாக வெற்றிகரமான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாக ருவான் விஜேவர்தன தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


சீனாவின் வளர்ச்சிப்பாதை போன்று இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ...
ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை - அரசாங்ம் திட்டவ...
நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு பொலிஸாருக்கு தேவை - பொலிஸாரை நம்பிய சமூகம் ...