ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, November 16th, 2022

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையைப் போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் நாடாளுமன்றில் முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: