ஜனவரிமுதல் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023

எதிர்வரும் ஜனவரிமுதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும்.

முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம் மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.

புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கி அதன் பிறகு படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: