சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

Thursday, December 2nd, 2021

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ்   ஒரு பயனாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினருமான தவநாதன் பயனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்துசிறப்பித்திரந்ததுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு உதவித் திட்டங்களை வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: