சொந்தப் பிரதேசங்களிலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் – இராணுவத் தளபதி கோரிக்கை!
Tuesday, August 31st, 2021கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதால், தங்களுடைய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மாத்திரம் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் பல தடுப்பூசி நிலையங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரசிகர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்குமாறு வடக்கு -கிழக்கு ஆயர் மன்றம் சுவி...
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நன்மைகளை...
|
|