சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வுக்கு பொதுமக்கள் ஆணைக்குழு!

சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தேர்வு காணும் வகையில் பொதுமக்கள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த ஆணைக்குழுவின் 06 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் ஆணைக்குழுவின் தலைவராக களனி பல்கலைகழக பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவும் செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் சாரத கன்னங்கரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் 28 நாட்கள் குறித்த ஆணைக்குழு செயற்படவுள்ளதொடு எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளது.
இதற்காக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மாணவ அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களையும் பெற்று கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
Related posts:
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டும்- அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!
சீரற்ற வானிலை: தொற்று நோய்கள் பரவும் அபாயம் - தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரிகள்!
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு - விவசாய ஏற்றுமதி திணைக்களம்!
|
|