சைட்டம் தடையினை அரசு உறுதிப்படுத்த வேண்டும்  –  தொழிற்சங்கங்கள் பல போராட்டத்தில்!

Sunday, June 25th, 2017

சைட்டம் தனியார் கல்வி நிறுவனத்தை அரசாங்கம் தடை செய்யாதிருத்தல் அரசின் அடக்குமுறை நடவடிக்கை மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரு துறைகளும் இணைந்து நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கையில், வைத்தியர்கள், தாதியர், ஆசிரியர்கள், தபால், துறைமுகங்கள், பெற்றோலியத் துறை, போக்குவரத்து போன்ற அரச துறை தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உடன்பாட்டைத் தெரிவித்துள்ளன.

தனியார் துறையில் வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சங்கங்கள் பல தமது உடன்பாட்டை அறிவித்துள்ளன. அரசியல் ரீதியிலான தொழிற்சங்கங்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் தொழிற்சங்க தலைவர் ஒருவர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts: