செப்ரொம்பர் முதல்  புதிய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம்!

Wednesday, August 24th, 2016

செப்டம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் பாதுகாப்பான  மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் எதிர்வரும் காலங்களில் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துகள் நாட்டில் அதிகரித்துள்ளதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: