சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை!

Saturday, March 25th, 2023

சுற்றுலா தொழில்துறை ஊடாக எதிர்காலத்தில் 3 பில்லியனுக்கும் அதிக டொலரை நாட்டின் பொருளாதாரத்திற்காக ஈட்ட எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வளர்ச்சியை காட்டுவதாக அந்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 2 இலட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.

பெப்ரவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 522 பேர் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் காரணமாக 13 ஆயிரத்து 841 பேர் பாதிப்பு புள்ளிவிபரத் தகவலில் சுட்டிக்காட...
அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு - சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரி...
மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 96 ஆயிரத்து 329 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத...