சுரக்ஸா காப்புறுதிக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு அனுப்புமாறு கோரிக்கை!

Wednesday, January 30th, 2019

சுரக்ஸா காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற விரும்பும் பாடசாலை மாணவர்கள், விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு நேரடியாக அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சுரக்ஸா காப்புறுதி திட்டத்திற்காக முன்னிலையான காப்புறுதி நிறுவனத்தின் உன்படிக்கையின் கால எல்லை டிசம்பர் முதலாம் திகதியுடன் முடிவடைந்தமையினால் புதிய நிறுவனத்துடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் வரை குறித்த நன்மைகள் கல்வியமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து விண்ணப்பமும் கல்வி பணிப்பாளர், குடும்ப சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கிளை, கல்வியமைச்சு, இசுரப்பாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரக்ஸா காப்புறுதி குறித்த மேலதிக விபரங்களை, 0112784163 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: