சுய விருப்புடன் ஓய்வுபெற விண்ணப்பித்த இ. போ. சபை ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு!  

Wednesday, October 5th, 2016

சுய விருப்பின் பேரில் ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான நஷ்ட ஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர் ரமல் சிரிவர்தன தெரிவித்துள்ளார்

முதற்கட்ட நட்ட ஈட்டிற்காக திறைசேரியூடாக 2410 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சுமார் 1077 பேருக்கு முதற்கட்டத்தில் நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில், மேலும் 1000 பேருக்கான நட்ட ஈடு எதிர்வரும் 2 மாதங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக ரமல் சிரிவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் சுய விருப்பின் பேரில் ஓய்வு பெறுவதற்கு 3486 ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிரிவர்தன தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

ctb

Related posts: