சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Friday, January 27th, 2023

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்களை கோரும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிற்கான பத்திரிகை விளம்பரங்களே இவ்வாறு வெளியிடப்படவுள்ளன.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப செயல்முறை பற்றிய கூடுதல் விவரங்கள் செய்தித்தாள் விளம்பரம் மூலம் அறிவிக்கப்படவுள்ளன.

நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் முதல் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: