சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Sunday, March 10th, 2019

நெடுந்தீவு பிரதேச சபையை மீண்டும் ஆரோக்கியமான சபையாக மாற்றியமைத்து எமது மக்களின் வாழ்வியலில் புதிய மாற்றத்தை உறுவாக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.ஆனாலும் இந்த பிரதேசத்தின் ஆட்சிப்பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது கைகளில் இருப்பதால் அவர்களது ஆழுமையற்ற செயற்பாடுகளால் முற்றாக முடக்கப்பட்டு காணப்படுகின்றது.இதனால் மக்களின் வாழ்வாதாரமும் முடக்கப்பட்டுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும்முகமாக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஷ்வரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன்போது கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் இப்பிரதேசத்தின் பல்வேறு தேவைப்படுகளையும் மக்களது வாழ்வாதார தேவைகளையும் பெற்றுக்கொடுத்திருந்தோம்.
அதுமட்டுமல்லாது 24 மணிநேர மின்சாரம், கடல் நீரை நன்னீராக்கி இப்பகுதி மக்களுக்கு குடிநீரை வழங்கியிருந்தோம். பல அரச தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தை சூட்சகமான முறையில் கைப்பற்றி இப்பிரதேசத்தின் அபிவிருத்திகளை செய்யவிடாது தடுத்து வருவதுடன் மக்களையும் அவல நிலைக்கு தள்ளியுள்ளனர்.
போக்குவரத்து மற்றும் இதர பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும் நிலை இருக்கின்றபோதும் இச்சபையை கைப்பற்றியுள்ள தரப்பினரது ஆழுமையற்ற செயற்பாடுகள் காரணமாக தொடர்ந்தும் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்தவகையில் இச்சபையின் செயற்பாடுகளை மக்கள் நலன்சார்ந்ததாக மாற்றியமைத்து வறிய மக்களின் வாழ்வில் மீண்டும் நாம் ஒளியேற்ரிதருவோம் என்றார்.

Related posts: