சுமந்திரனே தமிழரசின் தலைவராக வாய்ப்பு – சிறிதரன் பின்வாங்குவார் – ஈ.பி.டி.பி ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Tuesday, December 5th, 2023தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்வு இடம்பெறவுள்ள நிலையில் புதிய தலைவராக ஆபிரகாம் சுமந்திரனே தெரிவு செய்யப்டுவார் என ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – தமிழரசு கட்சியை வழி நடத்திய தலைவர் செல்வநாயகத்துக்கு பின் நெருக்கடியான காலகட்டத்தில் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் வழி நடத்தி வந்தார்கள்.
தற்போது தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கான போட்டி நிலவுகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பொறுத்தவரை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி வழங்கிய ஆசன ஒதுக்கு கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கத்தோலிக்க திருச்சபை வழங்கிய அழுத்தத்தின் காரணமாக அக்கால பகுதியில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றவர்.
அவருடைய நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் அக் காலத்தில் காரசாரமான கருத்து மோதல்கள் இடம் பெற்றதாக பேசப்பட்டது .
இவ்வாறான நிலையில் மருதங்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் புலிகள் தலைவருக்கு எவ்வாறு பாலா அண்ணா பக்க பலமாக இருந்தாரோ அவ்வாறு சம்பந்தன் ஐயாவுக்கு சுமந்திரன் பக்கபலமாக இருக்கிறார் என கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆகவே இவற்றையெல்லாம் பார்க்கும் போது தலைவர் தெரிவு என்பது ஒரு இணக்ப் பாட்டின் அடிப்படையில் இடம்பெறும் தெரிவாகவே நாம் பார்க்கின்ற நிலையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் சிறீதரன் தலைமை பதவித் தெரிவில் இருந்து தானாக பின்வாங்குவார் என்ற கருத்து பலமாக இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|