சுன்னாகத்தில் தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த 36 வயதுடைய இராசதுரை சுதாகரன் எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்ட கிணற்றில் சடலம் காணப்படுவதாக சுண்ணாக போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எபடீன் நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயமாகின்றது!
அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு!
தேர்தல் வெற்றி இந்திய - இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் – பிரதமர் மஹிந்...
|
|