சுதேச மருத்துவ துறையும் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் ராஜித!

Friday, July 21st, 2017

மேற்குலக மருத்துவ துறையை போன்று இலங்கையில் சுதேச மருத்துவ துறையும் அபிவிருத்தி செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இலங்கை ஆயுர்வேத ஒளடத கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை கௌரவிக்கும்; நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பாக அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் சுதேச மருத்துவதுறை பல்லாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் இந்தத் துறை சார்ந்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் இல்லாத காரணத்தால் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு இலங்கையில் சர்வதேச மருத்துவ மாநாட்டை நடத்தவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் மூலம் பல்வேறு நாடுகளில் அனுசரிக்கப்படும் சர்வதேச மருத்துவ துறை பற்றிய அறிவை பெற முடியும். உள்நாட்டு மருத்துவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.இலங்கையில் ஆயுர்வேத வைத்திய சபை இல்லை. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட மருத்துவ குறிப்புகளை மொழி பெயர்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: