சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, June 15th, 2020

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்

முகக்கவசம் அணிவது, சமூக விலகலைப் பின்பற்றுவது போன்ற சுகாதார வழிமுறைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்பற்றுகின்றபட்சத்தில், அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்

அத்துடன், தாங்கள் பெருமளவு மக்கள் ஒன்றுகூடுவதை ஊக்குவிக்காத அதேவேளை, ஆர்ப்பாட்டத்திற்காக குறிப்பிட்ட அளவிலானவர்களைப் பயன்படுத்தலாம் எனவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: