சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு தண்டம்!

Thursday, November 29th, 2018

யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல்யமான விடுதியொன்றைச் சோதனைக்கு உட்படுத்திய யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன், அங்கு காலாவதியான பொருள்கள், பழுதடைந்த பழங்கள், சுட்டுத்துண்டில்லாத பொருள்கள் ஆகியன இருந்தமையை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து விடுதியின் உரிமையாளருக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விடுதியின் உரிமையாளர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து அவருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

Related posts: