சீருடைகளில் மாற்றம் – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Saturday, December 30th, 2017

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள்  ஆகியோரின் சீருடைகளை மாற்றுவது தொடர்பில் சுகாதாரபோஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்குரிய கருத்துக்களை நடத்துவதற்கும்  ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கும் துறைசார்ந்த தொழிற் சங்கங்களிடம் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்  சுகாதாரத்துறை சார் உத்தியோகத்தர்களின் சீருடைகளில் காலோசிதமான மாற்றங்கள்மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அமைச்சரின் நிலைப்பாடாகும். தொழிற்சங்க அமைப்புக்களின் யோசனைகள் கிடைத்ததும் பேச்சுவார்த்தைநடத்தி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: