சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 519ஆக அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அதிக மழையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 3 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அவர்களில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 265 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அரச பதவிகளில் 8000 பட்டதாரிகள்!
அபிவிருத்தி இலக்கை அடைய ஜேர்மன் முழுமையான உதவி?
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருட்கள் அழிப்பு!
|
|