சீரற்ற காலநிலை – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுக்காக மூன்று கோடி ரூபா ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மூன்று கோடி ரூபா இடர்காப்பு மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய காப்புறுதிக்கு பொறுப்பான நிதியம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேதமடைந்த சொத்துக்களுக்காவும் விரைவாக இழப்பீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமித்த பத்திராஜா தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் சில தினங்களிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு திசையின் ஊடாக கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் இன்று காலை அதிகரித்த நிலையில் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய சப்ரகமுவ, மேற்கு, தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்க கூடும். கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது
Related posts:
|
|