சீன ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!

Saturday, October 28th, 2017

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்குக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாட்டின் போது இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உறவு வரலாற்று ரீதியான முக்கிய மைல் கல்லை எட்டியிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

சீன ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் நன்மைகள் இலங்கை – சீன மக்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: