சீன உதவியுடன் சிறுநீரக நோய்க்கு விஷேட வைத்தியசாலை !

Friday, May 27th, 2016

சீனா – இலங்கைக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையில், சிறுநீரக நோயாளிகளுக்கான விஷேட வைத்திசாலையை இலங்கையில் அமைப்பதற்காக 600 மில்லியன் யுவான் தொகையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

குறித்த நன்கொடையானது நேற்று வழங்கப்பட்டதுடன் அதற்கான ஒப்பந்தமானது இலங்கை சார்பில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டாக்டர் கருணாசேன கொடிதுவக்குவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நன்கொடையானது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதியான ஷீ ஜின் பிங்க்  ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதிபலன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நன்கொடையானது, இதற்கு முன்னர் ஜப்பானினால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவிற்கு வழங்கப்பட்டதன் பேரிலேயே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்திசாலை கட்டப்பட்டது.

Related posts: