சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி இலங்கையில்!

Wednesday, June 19th, 2019

சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டு தேசிய குழுவின் உதவித் தலைவரான வாங் காங் என்ற உயர்மட்டப் பிரதிநிதியே கொழும்பு வந்துள்ளார்.

இவர் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எனினும், இந்தப் பேச்சுக்களின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்களோ, சீன அரச பிரதிநிதி ஏனைய இலங்கை அரசியல் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு விபரங்களோ வெளியிடப்படவில்லை.

Related posts: