சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு – நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, October 21st, 2023

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(20) இரவு நாடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகவே  ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

கடந்த 16ம் திகதி சீனாவிற்கு சென்ற ஜனாதிபதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நேற்று நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: