சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் – சீனத் தூதரகம்!

Saturday, November 26th, 2022

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து இன்று நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

அந்த கப்பலில் இருந்து 10.6 மில்லியன் லீற்றர் (9,000 மெட்ரிக் தொன்) டீசல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சீன தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் இந்த டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

Related posts: