சிவப்பு உடை அணிந்த பெண்ணுக்கு நீதிவான் எச்சரிக்கை!

Thursday, January 3rd, 2019

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்த பெண் ஒருவர் சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்.

அவரது ஆடை தொடர்பில் விசனம் தெரிவித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமாக சமூகமளிக்க வேண்டுமென்று எச்சரித்தார். ஒழுக்கமுடைய இடமாக நீதிமன்றம் உள்ளது என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றுக்கு வருகை தருவோரின் உடை தொடர்பில் நீதிமன்ற பொலிஸ் அலுவலகர் கண்காணிப்பது அவசியம். அந்த நடைமுறையே அனைத்து நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படுகின்றன.

Related posts: