சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது, இந்த வார இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் எனவும், நிதி கிடைக்கப் பெறும் விதம் தொடர்பில் தற்போது கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்கு நிதி கிடைக்கப் பெற்றவுடன், நிதி கிடைத்த விதத்தை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குனறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் வலி. தெற்கு வட்டார உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் கலந்துரையாடல்!
ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!
சிறுபோக நெற்செய்கைக்கான செயற்றிட்டங்கள் தயாரிப்பு!
|
|