சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது இருக்க விஷேட ஏற்பாடு!

அண்மையில் களுத்துறை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினால் பாதுகாப்பு சீர் குலைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை பொலிஸ் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
களுத்துறையில் இடம்பெற்ற சிறைச்சாலை வாகனத்தின் மீதான தாக்குதல் சம்பவங்கள் இதற்கு முன்னரும் பலமுறை இடம்பெற்றன. சமீபத்திய தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸார் தரப்பில் குறைபாடுகள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது இருப்பதற்கு சட்ட ஒழுங்கு மற்றும் உரிய பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸ் உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயங்களை பிரதி பொலிஸ்மா அதிபர்களான பிரிஜந்த ஜெயக்கொடி மற்றும் அஜித் றோகண ஆகியோர் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.
சமீபத்திய சிறைச்சாலை வாகனம் மீதான தாக்குதலுடன் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையின் முன்னேற்றமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.
Related posts:
|
|