சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்க பிரதமர் ஆலோசனை!

Friday, January 8th, 2021

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உற்பத்தியாளர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள’ளார்.

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பாரியளவிலான அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னர் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் காணப்படும் உத்தரவாத நெல் விலைக்கு ஏற்ப பெப்ரவரி 01ஆம் திகதிமுதல் 06 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் அரிசிக்கான நிலையான விலையை பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணமாக கடன்களை செலுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: