சிறு போக நெற்செய்கையை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, June 27th, 2018

நாட்டின் இந்த வருடத்துக்கான சிறுபோக நெற்செய்கை ஐந்து இலட்சத்து 38 ஆயிரத்து 399 ஹெக்டயர் வரை அதிகரித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு இலட்சம் ஹெக்டேயர் வயற்பரப்பில் நெற் செய்கையை மேற்கொள்வதற்கு அமைச்சு திட்டமிட்டிருந்தது. எனினும் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக நெற்செய்கையை அதிகரிக்க முடிந்துள்ளது.

இதனால் சிறுபோகத்தில் கூடுதலான நெல் அறுவடையை எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நெற் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரமானியத்தை பெற்றுக் கொடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய உர கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: