சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு!

Wednesday, July 4th, 2018

5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவாலும் 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒப்பீட்டளவில் இவ்வாறு சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாவனையாளர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றம் புரியும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவோ அல்லது சிறைத்தண்டனை விதிக்கவோ சட்டத்தில் இடமுண்டு என தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: