சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் செயற்றிட்டம்!

Friday, November 25th, 2016

பாடசாலைகளில் சிறந்த விளையாட்டு வீரர்களை இனங்காணும் வகையில் கல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து சிறந்த விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் தரம் 7இல் கல்வி கற்கும் மாணவர்களை இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின் விளையாட்டுத் தொடர்பான திறமைகளை இனங்கண்டு அபிவிருத்தி செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ் வேலைத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு அறிவூட்டல் பயிற்சி செயலமர்வுகள் வலய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரம் 7இல் கல்வி கற்கும் மாணவர்களின் விளையாட்டுத்திறனை சோதனை செய்து சிறந்த விளையாட்டு விரர்களை அடையாளம் கானும் செயற்றிட்டம் வலய மட்டத்தில் எதிர்வரும் 29 மற்றும் 30 திகதிகளில் நடத்தப்படவுள்ளன. இத் தினங்களில் நாடளாவிய ரீதியில் இச் செயன்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளது. இவ் வேலைத்திட்டங்களுக்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர்.

mahajana

Related posts: