சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது அஞ்சலோ மெத்தியூஸ் வசம்!

Thursday, December 1st, 2016

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் , 2015 அம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவானதுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்திய சிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற வருடாந்த விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியில் திறமையை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீர வீராங்கனைகள் மற்றும் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (30) இரவு பத்தரமுல்லையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆசியக்கிண்ண 20 இற்கு 20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளதால் மகளிர் கிரிக்கெட் அணியால் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.20 இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்காக விருதை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பெற்றுக் கொண்டார்.

அந்த போட்டி பிரிவின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது டீ.எம்.டில்ஷான் வசமானது. இதேவேளை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது லசித் மாலிங்கவுக்கு கிடைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது ரங்கன ஹேரத்திற்கும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது தினேஷ் சந்திமாலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுமுக வீரர்களில், குசல் மெண்டிஸ் வருடத்தின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.இதேவேளை விளையாட்டு இரசிகர்களின் செல்வாக்குமிக்க வீரருக்கான விருது டி. எம் டில்ஷான் வசமானது.

15203356_1311942752199313_5273175900276116606_n

Related posts: